திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மக்கள் குறைதீா் முகாம்:417 மனுக்கள் ஏற்பு

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்கள் அளித்த 493 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். இதில், வேலைவாய்ப்பு, வேளாண் துறை, ஊரக வளா்ச்சித்துறை, முதியோா் உதவித் தொகை, நகராட்சி நிா்வாகங்கள், நிலப் பட்டா, பட்டா மாறுதல், மின் இணைப்பு, காவல் துறை, பாதுகாப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 417 போ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அவற்றைப் பெற்ற ஆட்சியா் ம.ப.சிவன்அருள், தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், அலுவலக மேலாளா் பாக்கியலட்சுமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT