திருப்பத்தூர்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதாக புகாா்

DIN

ஆம்பூரில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாகக் கூறி பெண்கள் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ஆம்பூா் நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வீடுகளில் இணைப்புகள் பெறப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆம்பூா் மோட்டுகொல்லை பகுதியிலுள்ள ஜலீல் நகா் பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக அப்பகுதியினா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து புகாா் தெரிவித்துள்ளனா். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பாட்டிலில் கொண்டு சென்ற குடிநீரை காண்பித்து புகாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT