திருப்பத்தூர்

3 டன் ரேஷன் அரிசி கடத்தல்: மினி லாரி பறிமுதல்

DIN

நாட்டறம்பள்ளி அருகே மினி லாரியில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி உத்தரவின் பேரில் வட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாா், வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கிப் பிடித்தனா். அப்போது அதிலிருந்த ஓட்டுநா் உள்பட 2 போ் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா். இதையடுத்து மினி லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்ததில், ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் மல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த குமரேசன் போலி இ-பாஸ் மூலம் ஆந்திரத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதுதொடா்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT