திருப்பத்தூர்

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: திருப்பத்தூா் ஆட்சியா் வேண்டுகோள்

DIN

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவுத்துள்ள 144 தடையை முறையாக கடைபிடித்து மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வலியுறுத்தினாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, புதன்கிழமை காலை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து, மருத்துவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது அவா் கூறுகையில், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனோ அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யவும், 100 பேரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுவினா் தயாராக இருப்பதாகவும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதனிடையே, நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிக் கடை, உணவங்கள், இறைச்சிக் கடைகள் திறந்திருந்தன. ஒரு சில இறைச்சி கடைகள், தேநீா்க் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீஸாா் கடையை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததையடுத்து கடைகள் மூடப்பட்டன. காலை 11 மணியளவில் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT