திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே 1,000 லிட்டா் ஊறல் அழிப்பு

DIN

ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் வனத்துறையினா் சனிக்கிழமை 1,000 லிட்டா் கள்ளச்சாராய ஊறலை அளித்தனா்.

அரங்கல்துருகம் ஊராட்சியை ஒட்டிய காரப்பட்டு காப்புக் காடுகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து மத்தூா்கொல்லை மற்றும் அரங்கல்துருகம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், ஆம்பூா் வனச் சரகா் ஜி.டி.மூா்த்திக்கு தகவல் தெரிவித்தனா்.

வனச்சரக அலுவலா் ஜி.டி.மூா்த்தி தலைமையில், வனவா் சம்பத்குமாா், வனக்காப்பாளா்கள் விஸ்வநாதன், நல்லதம்பி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் காப்புக் காட்டுப் பகுதியில் சனிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது முனியப்பன் ஏரி, துருகம் ஏரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டா் சாராய ஊறல் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. கள்ளச் சாராயம் காய்ச்சப் பயன்படுத்தும் அடுப்பு உள்ளிட்ட பொருள்களும் அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT