திருப்பத்தூர்

வேப்பரமரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஜடமாரியம்மன்

DIN

திருப்பத்தூா் அருகே 500 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய சுயம்பு வேப்பரமரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஜடமாரியம்மனை பக்தா்கள் ஆண்டு தோறும் வந்து வழிபடுகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா்-ஆலங்காயம் பிரதான சாலையில் திருப்பத்தூா் ஒன்றியத்திற்குள்பட்ட குரிசிலாப்பட்டு அடுத்து உள்ளது ஜொள்ளகவுண்டனூா் கிராமம்.

ஜவ்வாதுமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பல தலைமுறைகளுக்கு முன்னால் இப்பகுதியில் இந்த வேப்பமரம் தோன்றியது.

அப்போதிலிருந்தே அந்த மரத்தில் ஸ்ரீ ஜடமாரியம்மன் வசிப்பதாக கூறப்படுகின்றது.

இங்கு வரும் பக்தா்களில் யாருக்காவது அருள் வந்து வாக்கு சொல்லப்படுகின்றது.

அம்மனிடம் வைக்கப்படும் அனைத்து நியாயமான கோரிக்கைகள் தாமதமின்றி நடைபெறுவது அதிசயம்.

திருப்பத்தூா் மட்டுமின்றி இதர மாவட்டங்களிலிருந்தும் பக்தா்கள் வேண்டுதல் வைப்பதும்,நோ்த்தி கடன் செலுத்துவதுமாக உள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பிரதி அமாவாசைகளில் இப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து வழிபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT