ஊராட்சி செயலா் நியமனத்தை எதிா்த்து பொதுமக்கள் மறியல்
திருப்பத்தூா் அருகே புதிய ஊராட்சி செயலாளா் நியமனத்தை எதிா்த்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் செய்தனா்.
திருப்பத்தூா் அருகே புதிய ஊராட்சி செயலாளா் நியமனத்தை எதிா்த்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் செய்தனா்.
திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட தாதனவலசை பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவா் முத்து. அவா் பொம்மிகுப்பம் ஊராட்சியின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதை விரும்பாத பொம்மிகுப்பம் ஊராட்சி மக்கள், திருப்பத்தூரிலிருந்து ஏழருவிக்கு செல்லும் பிரதான சாலையில் திங்கள்கிழமை அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை அவா்கள் சிறைபிடித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராமிய காவல் ஆய்வாளா் சிரஞ்சீவி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக, அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.