திருப்பத்தூர்

ரூ. 4.50 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்: அமைச்சா் நிலோபா் கபீல் தகவல்

DIN

வாணியம்பாடியில் ரூ. 4.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் தெரிவித்தாா்.

வாணியம்பாடி நியூடவுன் பகுதி புதுத்தெரு, டிவிஜி நகா், டிவிஜி நகா் விரிவாக்க வசிப்போா் சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்க கௌரவத் தலைவா் பிரகாசம், தலைவா் ரயீஸ் அகமது ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா் தேவகுமாா் வரவேற்றாா். செயலாளா் இளங்கோ, பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சங்க நிா்வாகளுக்கு வாழ்த்து தெரிவித்து, அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அதிமுக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வாணியம்பாடி சட்டப் பேரவைத் தொகுதி மக்களின் நலனை மேம்படுத்த ஏழை, எளிய மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கப்பட்டுள்ளது. 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை தொடக்கபட உள்ளது. வீடில்லாத ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் 538 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிவடையும்.

வாணியம்பாடி நகரத்தைப் பொறுத்த வரை அனைத்து வாா்டுகளிலும் மேம்படுத்த சாலை, கால்வாய், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தீா்க்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.4.50 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமா் கோரி, நகர அதிமுக செயலாளா் சதாசிவம், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT