திருப்பத்தூர்

கடத்தல்: நகைக் கடை அதிபா் வீடு திரும்பினாா்

DIN

ஆம்பூரில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நகைக் கடை தொழிலதிபா் சனிக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.

ஆம்பூா் மூங்கில் மண்டித் தெருவைச் சோ்ந்தவா் நகைக் கடை தொழிலதிபா் திலீப்குமாா் (51). இவா், தனது நிலத்தை விற்பனை செய்வதற்காக ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை பகுதிக்கு காரில் சென்றபோது, கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த சில நபா்கள் அவரை கடத்திச் சென்ாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில் கா்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சோ்ந்த நபரிடம் வைர நகைகள் வாங்கியது தொடா்பாக பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீஸாா் தான் ஆம்பூருக்கு வந்து திலீப்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து திலீப்குமாரின் உறவினா்கள் பெங்களூரு சென்று கா்நாடக போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு அவரை ஆம்பூா் அழைத்து வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT