முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள்.
பகிர்:

ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் குறுக்கே உள்ள இரயில்வே சுரங்க பாலத்தின் கீழ் பாதையில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

இது குறித்து நடவடிக்கை கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் கடந்த மாதம் முழுவதும் பெய்த தொடர் மழையால் தேங்கி நின்ற தண்ணீரில் கடந்து செல்ல பொது மக்கள் அவதியுற்று வந்த நிலையில் நடவடிக்கை கோரி பொதுமக்கள் அறிவித்தபடி இன்று (அக்.6, செவ்வாய்கிழமை) ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பேரை காவல்துறை தடுத்து கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.