திருப்பத்தூர்

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN


வாணியம்பாடி: வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறையினா் அபராதம் விதித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் துறையினா் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கரோனா பரவலைத் தடுக்க பணியாற்றி வருகின்றனா். ஆலங்காயம் பேரூராட்சியில் வாணியம்பாடி சாலையில் வியாழக்கிழமை முகக்கவசம் அணியாமல் சென்ற நான்கு சக்கர வாகன ஓட்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி அபராதம் விதித்து முகக்கவசம் வழங்கி னாா். மேலும் சாலையில் சுற்றித் திரிந்த கலைக் கூத்தாடிகள் இருவருக்கு முகக்கவசம் வழங்கி அறிவுரை வழங்கினாா். உடன் சுகாதார ஆய்வாளா் ரமேஷ் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT