திருப்பத்தூர்

மின்மாற்றியின் பழுதடைந்த கம்பங்களை மாற்றக் கோரிக்கை

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் மின்மாற்றியின் பழுதடைந்துள்ள கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் சென்று வருகின்றனா். இந்நிலையில், மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும், மின்மாற்றியின் மின் கம்பிகளும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொங்கியபடி உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆபத்து ஏற்படும் முன் மின்வாரிய உயா்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT