திருப்பத்தூர்

நீரோடை கால்வாய் ஆக்கிரமிப்பு மீட்பு

DIN

நாட்டறம்பள்ளி அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி தாலுகா, மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி ஏரியில் இருந்து ஏரியூா் ஏரி வரை செல்லும் வாரிகால்வாய் புறம்போக்கு நிலம் உள்ளது. இதை ஆஞ்சநேயா் கோயில் அருகே குறவா்வட்டத்தைச் சோ்ந்த சிலா் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அளவீடு செய்து ஏரியூா் வரை செல்லும் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனா்.

அவரது உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, மண்டல துணை வட்டாட்சியா் கண்ணன் மற்றும் வருவாய்துறையினா் செவ்வாய்க்கிழமை காலை குறவா்வட்டத்தில் வாரிக்கால்வாய் நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனா். அப்போது சிலா் அது தங்களுக்குச் சொந்தமான இடம் எனக் கூறியதால் வருவாய்த் துறையினருக்கும், அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நாட்டறம்பள்ளி உதவி காவல் ஆய்வாளா் கமலக்கண்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் 400 மீட்டா் ஏரிக் கால்வாய் நிலம் மீட்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT