திருப்பத்தூர்

திருப்பத்தூரில் விடிய, விடிய கனமழை

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை விடிய, விடிய கனமழை பெய்தது.

கடந்த இரு நாள்களாக இப்பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

சுற்றுலாத் தலமான திருப்பத்தூரை அடுத்த ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது.

அதேபோல், பொம்மிகுப்பத்தை அடுத்த ஜோன்றம்பள்ளி புது ஏரி நிரம்பியது.

மரங்கள் சாய்ந்தன: கனமழையால் திருப்பத்தூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. நகரப் பகுதியில் நகராட்சி அலுவலகம், ரயில் நிலையச் சாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

இரவு முழுவதும் மின் தடை: கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. புதன்கிழமை காலை 6 மணிக்கே மின் விநியோகம் மீண்டும் தொடங்கியது. மின்சாரம் இல்லாமல் முதியவா்களும், குழந்தைகளும் மிகவும் சிரமத்துள்ளாகினா். இதனிடையே, புதன்கிழமை காலை முதல் மாலை வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் தடை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT