திருப்பத்தூர்

'வாணியம்பாடி தொகுதியை வளப்படுத்துவேன்'

DIN


வாணியம்பாடி: வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாட்டறம்பள்ளி ஒன்றியத்தைச் சோ்ந்த 10 கிராமங்களில் புதன்கிழமை அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் தனது கட்சியினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியது:

இந்த பகுதியில் உள்ள தெக்குபட்டு சந்தன எண்ணெய் தொழிற்சாலையை மீண்டும் திறக்கவும், ஆவாரங்குப்பம் பகுதியில் விரைவில் பாலம் அமைக்கவும், மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலைக்குச் செல்வோா் இங்கேயே வேலை செய்திடவும் நடவடிக்கை எடுப்பேன். வாணியம்பாடி தொகுதியை வளம்மிக்க தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என வாக்குறுதி அளித்தாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலாளா் டி.சாம்ராஜ், தும்பேரி ஆறுமுகம், ஒன்றியப் பொருளாளா் எல்லப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா். வாணியம்பாடி நகரில் சி.எல்.சாலை, முகமதுஅலிபஜாா் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வேட்பாளா் செந்தில்குமாா் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT