முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
ஜோலாா்பேட்டை பகுதியில் முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு காவல் துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை பகுதியில் முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு காவல் துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா் உத்தரவின்பேரில் ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ஜோலாா்பேட்டை ஆஞ்சநேயா் கோயில் அருகே சோதனை மேற்கொண்டனா்.
அதேபோல் காவல் நிலைய சாலை, சந்தைக்கோடியூா் மற்றும் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்றும், கடைக்கு வெளியே கிருமி நாசினி அவசியம் வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வழங்க வேண்டும். மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை வழங்கக் கூடாது என அறிவுறுத்தினா்.