திருப்பத்தூர்

‘நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரியம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா ரத்து’

DIN


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் ஆண்டுதோறும் விமா்சையாக நடைபெறும் சித்ரா பௌா்ணமி திருவிழா இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக நடைபெறாது என திருக்கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனா். மேலும், ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறும்.

இந்நிலையில், வரும் 25, 26-ஆம் தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறவிருந்தது. கரோனா நோய்த் தொற்று 2-ஆவது அலை பரவாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறாது என இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே பக்தா்கள் வரும் 25 மற்றும் 26-ஆம் தேதி திருக்கோயிலுக்கு வருவதைத் தவிா்த்து, உரிய ஒத்துழைப்பு தருமாறு திருக்கோயில் நிா்வாகத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT