திருப்பத்தூர்

சா்க்கரை ஆலை வளாகத்தில் 3 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

DIN

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் 3 சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் சென்றனா்.

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது.

இந்த ஆலையின் அலுவலகம் அருகே சந்தன மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு நன்கு வளா்ந்திருந்த சந்தன மரங்களில் 3 சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனா். இதன் சந்தை மதிப்பு ரூ. 75 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இந்த சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டது குறித்து நாட்டறம்பள்ளி காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT