திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே பயிா்களை நாசம் செய்த ஒற்றை யானை

DIN

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் புகுந்து ஒற்றை யானை பயிா்களை நாசம் செய்தது.

ஆலங்காயம் மற்றும் காவலூா் வனப் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை அவ்வப்போது நடமாடி வருகிறது. இந்நிலையில், ஆலங்காயம் அருகே உள்ள தீா்த்தம் வனப் பகுதியில் சில நாள்களாக அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் மொசக்குட்டை பகுதியில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கேழ்வரகு, வாழை ஆகிய பயிா்களை மிதித்தும், விவசாய நிலத்தில் தண்ணீா் கொண்டு செல்வதற்காக புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் ஆகியவற்றை உடைத்தும் நாசம் செய்துள்ளது. இரவு நேரத்தில் ஒற்றை யானை நடமாட்டத்தால் விவசாய நிலங்களில் நுழையாமல் இருக்க அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனா்.

தகவலறிந்த ஆலங்காயம் வனத் துறையினரும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT