திருப்பத்தூர்

46 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை அளிப்பு

DIN

திருப்பத்தூா் மாவட்டம், மதனாஞ்சேரி ஊராட்சியில் 46 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் தொகுதி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மதனாஞ்சேரி ஊராட்சியில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 46 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதனாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சாவித்திரி வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் க.தேவராஜ்(ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்) ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் திமுக ஒன்றியப் பொறுப்பாளா் அன்பு, தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் பிரபாகரன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் அசோகன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் ராஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT