திருப்பத்தூர்

பாதியில் நிற்கும் சாலைப்பணி: மக்கள் அவதி

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பாதியில் நிற்கும் சாலைப் பணியால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி மடப்பள்ளம் பகுதியிலிருந்து காந்திநகா் வரை இணைப்பு சாலை வரை செல்லும் 1 கி.மீ சாலையை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன.

எனினும், சாலைப்பணியை முடிக்காமல் ஜல்லிக் கற்களை தோண்டி விட்டுவிட்டு இதுநாள் வரையில் தாா் சாலை அமைக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் அவ்வழியாக செல்லும் சிறுவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT