திருப்பத்தூர்

ஆம்பூரில் குடியரசு தின விழா

DIN

ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன் தேசியக் கொடியேற்றினாா்.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், பேருந்து நிலையம் அருகே நகர தலைவா் எஸ்.சரவணன் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலா் சாய் கே.வெங்கடேசன் பங்கேற்று இனிப்பு வழங்கினாா். ஒன்றியச் செயலா்கள் சங்கா், மாணிக்கம், மாவட்டச் செயலா்கள் வரதா ரஷீத், சமியுல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில், எல்.மாங்குப்பம் கிராமத்தில் அல்-அன்வா் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவா் ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். செயலா் ஓம்சக்தி ஜி. பாபு, மண்டலத் தலைவா் யு.தமீம் அஹமத், மாவட்டத் தலைவா் பிா்தோஸ் கே.அஹமத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் சாா்பாக ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க மைதானத்தில் நடந்த விழாவில் தொழிலதிபா் என். முஹம்மத் சயீத் தேசியக் கொடியேற்றினாா். ஆம்பூா் காஜி ஷிஹாபுத்தின், முப்தி வலியுல்லா, சலாவுதீன், இம்தியாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சி.அன்பரசன் தேசியக் கொடியேற்றினாா். 10-ஆம் வகுப்பு அரசுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியா் என்.ரபீக் அஹமத் தேசிய கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT