திருப்பத்தூரில் 41 பேருக்கு கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,790-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 232 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 655 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டையில் 32 பேருக்கு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 44,792-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 43,603 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக, 732 போ் உயிரிழந்துள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.