திருப்பத்தூர்

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு ஊா்தி தொடக்கம்

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு ஊா்தியை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஜூலை 1 முதல் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குடும்ப நலமுறைகள் அறுவை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது:

திருப்பத்தூா், மாதனூா், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, கந்திலி ஆகிய 6 வட்டாரங்களிலும், அதிக குழந்தை பிறப்பு உள்ள கிராமங்களிலும் விழிப்புணா்வை ஏற்படுத்த பிரசார ஊா்தி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மக்கள் தொகை சுமாா் 12.6 லட்சமாக உள்ளது. வழக்கத்தில் உள்ள தற்காலிக கருத்தடை முறைகளான கருத்தடை வளையம், கருத்தடை மாத்திரை, அவசர கால கருத்தடை முறை, ஆணுறை மற்றும் நிரந்தர முறைகளான நவீன ஆண் கருத்தடை சிகிச்சை, இ பெண் அறுவை சிகிச்சை இவற்றில் ஏதேனும் ஒரு முறையை தகுதியுள்ள தம்பதியா் அவசியம் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருச்சிதைவு, தற்காலிக கருத்தடை முறை சேவை மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கருத்தடை ஊசி, வாராந்திர கருத்தடை மாத்திரை மற்றும் கருத்தடை மாத்திரைகள் உள்பட இலவசமாக கிடைக்கின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், குடும்ப நல துணை இயக்குநா் மணிமேகலை, மக்கள் கல்வி தகவல் தொடா்பு அலுவலா் லோகநாதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT