திருப்பத்தூர்

திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் அமா்குஷ்வாஹா வழங்கினாா்.

முகாமில் மனு அளித்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் மனுக்களில் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு, புதிய மின்னணு குடும்ப அட்டை உடனடியாக வழங்கப்பட்டன.

இதையடுத்து, ஆட்சியா் பேசியது:

தமிழக அரசு திருநங்கைகளுக்கு அறிவிக்கும் அனைத்து நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து திருநங்கைகளும் மின்னணு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை,வாக்காளா் அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.

படித்த திருநங்கைகள் உறுப்பினா்களுக்கு சுயதொழில்செய்ய உதவித்தொகை பெற்றிடவும் ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்படும்.

திருநங்கைகள் குழுக்களாக இணைந்து, கோரிக்கைகள், தேவைகள் குறித்து மனுக்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், வட்ட வழங்கல் அலுவலா்கள் கண்ணன், நடராஜன், காஞ்சனா,செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT