திருப்பத்தூர்

ஏலகிரியில் உள்விளையாட்டரங்கம், தாவரவியல் பூங்கா: ஆட்சியா் தகவல்

DIN

ஏலகிரி மலையை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்ற உள் விளையாட்டரங்கம், தாவரவியல் பூங்கா ஆகியவற்றை அமைப்பதற்கான இடங்களை திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.

ஜோலா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலகிரிமலை ஊராட்சியில் உள்ள பள்ளகனியூா் கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 80 ஏக்கரில் சுமாா் 20 ஏக்கரில் தாவரவியல் பூங்கா, 8 ஏக்கரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் உள்- வெளி விளையாட்டு அரங்கம், நிலாவூா் கிராமத்தில் பலவகையான மலா்கள் பூங்கா அமைத்தல், சிறிய படகு இல்லத்தை மேம்படுத்திடுதல் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

இதேபோல், பள்ளகனியூா் கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 25 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்க ஆய்வு செய்ய தோட்டக்கலை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னா், நிலாவூா் கிராமத்தில் உள்ள ஏரியை நன்கு தூா்வாரி ஆழப்படுத்தவும், ஏரியைச் சுற்றி மரக்கன்றுகள் நடவும், சிறுவா்கள் பூங்கா அமைக்கவும், படகு இல்லமாக உருவாக்கவும் பொதுப்பணித் துறை அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

‘உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு நிகராக ஏலகிரிக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈா்க்க ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டம் செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை ஓரிரு ஆண்டுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்’ என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மோகன், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் பிரபாகா், வட்டாட்சியா் சிவபிரகாசம், ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்க பொறுப்பாளா் ஜான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT