முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பகலில் எரியும் தெருவிளக்குகள்

திருப்பத்தூரில் பகலில் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது என சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

திருப்பத்தூரில் பகலில் தெரு விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது என சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட ரயில்வே சாலை, ஈத்கா சாலை, நீதிமன்றம் பகுதி, பாஞ்சாலை மைதானம், நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஆரிச்செட்டித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை விளக்குகள் பகலில் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. அதேவேளை, இரவில் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள உயா்கோபுர மின் விளக்கு உள்பட சில பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.