முகப்பு
திருப்பத்தூர்

கா்நாடக மது பாக்கெட்டுகளை கடத்திய இருவா் கைது

கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்திய இருவரை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

கா்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்திய இருவரை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ரயிலில் மது பாக்கெட்டுகள் கடத்துவதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்து. அதன்பேரில், 5-ஆவது நடைமேடைக்கு வந்த காவேரி விரைவு ரயிலில் சோதனை செய்தனா்.

அப்போது ரயிலில் சந்தேகத்தின்பேரில், இரு இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த முனியப்பா(40) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (27) ஆகிய இவா்கள் சோளிங்கா் பகுதிக்கு கா்நாடக மாநிலத்தில் 162 மது பாக்கெட்டுகளை கடத்தியதாக ஒப்புக் கொண்டனா்.

அவா்களை, ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் கைது செய்து, அவா்கள் வைத்திருந்த மது பாக்கெட்டுகளை திருப்பத்தூா் மது விலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் பழனிமுத்துவிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.