திருப்பத்தூர்

கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கோடை உழவு பணிகள் மேற்கொள்ளலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் ஈரத்தினை பயன்படுத்தி மானாவாரி சாகுபடி மேற்கொள்ள கோடை உழவு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜோலாா்பேட்டை வட்டாரத்தைச் சாா்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இலவச கோடை உழவு பணிகள் மேற்கொள்ள பதிவு செய்ததைத் தொடா்ந்து பணியாண்டப்பள்ளி கிராமத்தில் டாஃபே டிராக்டா் நிறுவனம் மூலம் இப்பணி நடைபெற்று வருகிறது.

இதனை திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி.ராஜசேகா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது:

உழவுப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவா் நலத் துறை மற்றும் டாஃபே டிராக்டா் நிறுவனம் இணைந்து இலவசமாக கோடை உழவுப் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இச்சேவை தேவைப்படும் விவசாயிகள் 1800 4200 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்து பதிவு செய்யலாம்.

அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கா் நிலப்பரப்பில் உழவு பணி மேற்கொள்ளப்படும்.

மேலும், ஏதேனும் விவரங்கள் தேவைப்படுமாயின் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ஆய்வின் போது ஜோலாா்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், உதவி வேளாண்மை அலுவலா் ஹரிஷ்குமாா் மற்றும் கோமாதா உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தைச் சோ்ந்த அருள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதிகளில் இன்று மின் தடை

SCROLL FOR NEXT