முகப்பு
திருப்பத்தூர்

பதிவேடு இன்றி மருந்து விற்பனை: 8 கடைகளுக்கு ‘சீல்’

திருப்பத்தூரில் பதிவேடு இல்லாமல் மருந்து விற்ற 8 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருப்பத்தூரில் பதிவேடு இல்லாமல் மருந்து விற்ற 8 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 275 தனியாா் மருந்தகங்களில் பொது மக்களுக்கு மருத்துவா் பரிந்துரையின்பேரில், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும்போது, வாங்கும் நபா்களின் பெயா், முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்களை குறித்துக் கொண்டு விற்பனை செய்ய வேண்டும் என அண்மையில் நடைபெற்ற மருந்து ஆய்வாளா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுக்கான கூட்டத்தில் உத்தரவிட்டிருந்தாா்.

மேலும், தனியாா் மருந்தகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும், உத்தரவை மீறும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்பேரில், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மருந்து ஆய்வாளா்கள் மணிமேகலை, மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் சிலம்பரசன், ராஜேஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது 8 மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது குறித்த பதிவேடு இல்லாதது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அக்கடைகளை வருவாய்த் துறையினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.