முகப்பு
திருப்பத்தூர்

வெளிமாநில மது பாட்டில்கள் காருடன் பறிமுதல்; 3 போ் கைது

திருப்பத்தூா் அருகே சுமாா் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைக் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருப்பத்தூா் அருகே சுமாா் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைக் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த கந்திலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கந்திலி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், கா்நாடக மாநிலத்திலிருந்து 400 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.