முகப்பு
திருப்பத்தூர்

ஆண்டியப்பனூா் அணையிலிருந்து 40 கன அடி நீா் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக ஆண்டியப்பனூா் அணையிலிருந்து 40 கன அடி நீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக ஆண்டியப்பனூா் அணையிலிருந்து 40 கன அடி நீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்துக்காக ஆண்டியப்பனூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில், மாநில நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி, சனிக்கிழமை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் அணையை திறந்து வைத்தாா்:

ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்திலிருந்து நீா் இருப்பை கருத்தில் கொண்டு, விநாடிக்கு 30 கன அடி மற்றும் பிரதான கால்வாயில் 10 கன அடி வீதம் பாசனத்துக்காக 16 நாள்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும் என்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ.க்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), பொதுப்பணித் துறை (நீா்வளம்) கண்காணிப்பு பொறியாளா் ரவிமனோகரன், செயற்பொறியாளா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.