ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் தீப்பிடித்து எரிந்தது.
பெங்களூரு எஸ்.ஆா்.கே. காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் அஷ்ரேபுல்லா. இவா் தனது குடும்பத்துடன் காரில் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆம்பூா் அருகே தேவிகாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் காா் சென்றபோது திடீரென அதன் என்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கி பாா்த்துள்ளாா். புகை தீயாக மாறி எரியத் துவங்கியது. உள்ளே இருந்த 2 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்டவா்கள் காரை விட்டு வெளியேறினா். காா் முழுவதும் தீ பரவி முழுவதுமாக எரியத் துவங்கியது. தகவல் அறிந்த ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.