திருப்பத்தூர்

அமமுக வேட்பாளா் உள்பட மூவா் மீது போலீஸாா் வழக்கு

DIN

குடியாத்தம் தொகுதி அமமுக வேட்பாளா் மீது உமா்ஆபாத் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உமா்ஆபாத் பகுதியில் போ்ணாம்பட்டு-நரியம்பட்டு சாலை சந்திப்பில் குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் செல்வ கணேச பாண்டியன் குழுவினா் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட முயன்றனா். அப்போது அந்த காரில் குடியாத்தம் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெயந்தி பத்மநாபன் இருப்பது தெரியவந்தது. ஜெயந்தி பத்மநாபன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபா்கள் பறக்கும்படை அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதனால் குடியாத்தம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின்பேரில், பறக்கும் படை அலுவலா் செல்வ கணேச பாண்டியன் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், தோ்தல் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமமுக வேட்பாளா் ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT