திருப்பத்தூர்

வாகன சோதனையில் ரூ.2.49 லட்சம் பறிமுதல்

DIN

ஆம்பூா், வாணியம்பாடி தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 2.49 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் தொகுதி வெலத்திகாமணிபெண்டா கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணம் இன்றி ரூ. 1.49 லட்சம் ரொக்கப் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதன் பேரில், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கொல்லப்பள்ளி சோதனைச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, அதை ஓட்டி வந்தவரிடம் சோதனையிட்டனா். அப்போது அவரிடம் ரூ. 1 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரித்த அதிகாரிகள் ஆந்திர மாநிலம், நாயனூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு, வாணியம்பாடியில் நகை எடுப்பதற்காக செல்வதாகத் தெரிவித்துள்ளாா். இருப்பினும் பணம் எடுத்துச் செல்வதற்கான எந்த ஆவணமும் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்து வாணியம்பாடி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT