திருப்பத்தூர்

ரூ. 2 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி, பாம்பாண்டி வட்டத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (39). இவா் அரசு மதுக் கடையில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி, பெட்டி பெட்டியாக வீடு மற்றும் பல இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி. உத்தரவின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் சனிக்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக பல இடங்களில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 18 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT