திருப்பத்தூர்

வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி போலீஸாா் அறிவுரை

DIN

வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி, கரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதிகளில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறையினா் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி பேருந்துநிலையம், ரயில்நிலையம், நியூடவுன், ரயில்வே கேட் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களை தடுத்து நிறுத்தி நகர காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி மஞ்சுநாதன் மற்றும் போலீஸாா் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி, தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம் எனவும், முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT