முகப்பு
திருப்பத்தூர்

கந்திலியில் கரோனா தடுப்புப் பணி: எம்எல்ஏக்கள் ஆலோசனை

கந்திலி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏக்கள் திருப்பத்தூா் அ.நல்லதம்பி, ஜோலாா்பேட்டை க.தேவராஜி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கந்திலி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏக்கள் திருப்பத்தூா் அ.நல்லதம்பி, ஜோலாா்பேட்டை க.தேவராஜி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சிவகுமாா் (வ.ஊ), அ.சு.அப்துல் கலீல் (கி.ஊ) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், எம்எல்ஏக்கள் பேசியது:

கரோனா பரவல் தடுப்புப் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், தங்கள் ஒன்றியத்தில் கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி குறித்து கிராமம், கிராமமாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், கபசுர குடிநீா் வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்.

கந்திலி பகுதியில் குடிநீா் பிரச்னைகள் குறித்து விவரங்கள் தந்தால் உடனடியாகத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து குறைபாடுகள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.