முகப்பு
திருப்பத்தூர்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

 வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூர்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

 வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆட்சியா், முகாமில் பங்கேற்கும் நபா்கள் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.

பின்னா், அருகில் இருந்த புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்ற ஆட்சியா், அங்குள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு சிகிச்சைக்காக வந்திருந்தவா்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து விசாரித்தாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போடாமல் இருந்தால் முகாமில் தடுப்பூசி போட ஏற்பாடு வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். புறநோயாளிகள் பிரிவில் தினமும் ஆயிரக்கணக்கானவா்கள் வந்து செல்வதால் கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்யும்படியும் ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →