உலக அமைதிக்கான ஒரு முன்னெடுப்பு!
உலக சமாதான அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அமைதிக்காக நவம்பர் 11-ஆம் தேதி அமைதிக்கான கூடுதலை ஆயிரக்கணக்கான அமைதிக்காக பணி செய்யும் உணர்வாளர்களை, செயல்பாட்டாளர்களை வைத்து மாநாடு நடத்தி வருகிறது.
நடுப்பக்கக் கட்டுரைகள்உலக அமைதிக்கான ஒரு முன்னெடுப்பு!
உலக சமாதான அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அமைதிக்காக நவம்பர் 11-ஆம் தேதி அமைதிக்கான கூடுதலை ஆயிரக்கணக்கான அமைதிக்காக பணி செய்யும் உணர்வாளர்களை, செயல்பாட்டாளர்களை வைத்து மாநாடு நடத்தி வருகிறது.
இன்று நாடுகள் போர் செய்து கொள்கின்றன- நாட்டுத் தலைவர்களின் ஆதிக்கம் செலுத்தும் பேராசையினால். ஐ.நா. சபை என்ற ஒன்று இருந்தும் போரை நிறுத்த இயலவில்லை.
நாம் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவராக இருந்தால், நாம் இருக்குமிடத்தில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நாம் உண்மை பேச வேண்டும். நாம் தர்மமாக, நியாயமாக, ஒழுக்கமாக இருந்து நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஒழுக்கமாக, நியாயமாக, உண்மையுடன் வாழ முடியும் என்பதை நடைமுறையில் வாழ்ந்து காண்பித்து மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். நாம் இருக்குமிடத்தில் வன்முறையற்று அனைவரும் அமைதியாக, சமூகமாக வாழ வேண்டும். அதுதான் இன்று நம் எல்லோருக்கும் தேவையான ஒன்று.
அதற்கு சமூகப் பார்வை கொண்ட இளைஞர்களை பயிற்சியின் மூலம் தயார் செய்ய வேண்டும். இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளாக இருந்த போர்ச்சூழல் அதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
இது இலங்கையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் இதுதான் நிலை என்று கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி சமீபத்தில் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார். அவர் ஐ.நா. சபை அமைப்பொன்றில் பணி செய்துவிட்டு இன்று அமைதிக்காக ஓர் அமைப்பை உலக அளவிலும், இந்தியாவிலும் உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கும் முனைவர் ஜில் கார் ஹரீஸ். இன்று உலகில் மனிதர்கள் உடல் வலிமையைக் காட்டி ஆதிக்கம் செலுத்துவதுபோல் படை வலிமையை வைத்து தன் தலைமையின் வீரத்தைப் பறைசாற்றுவது தான் தலைமை என்ற புரிதலோடு செயல்படும் தலைவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இன்றைய அமைதியற்ற உலகச் சூழல்” என்றார்.
இன்று வன்முறை இல்லாத இடமே இல்லை என்ற சூழலுக்கு உலகைக் கொண்டு வந்து விட்டனர் நாட்டின் தலைவர்கள் என்றார். இன்று உலகுக்குத் தேவை நிதி அல்ல; தொழில்நுட்பம் அல்ல; அறிவியல் அல்ல, இவை அனைத்தும் எல்லையற்று உருவாக்கப்பட்டுவிட்டன. எல்லையற்று வளர்ந்த இவை கூட உலக அமைதி கெடுவதற்கான காரணம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். இன்றைய தேவை அமைதி. அதற்கு ஒரு தலைமை. அது அமைதிக்கு வழிகாட்டும் தலைமை. இதை உலகத்துக்குத் தர இந்தியாவால் மட்டுமே முடியும்” என்றார்.
காரணம், இந்தியா ஓர் ஆன்மிக பூமி, கர்ம பூமி. பல்லாயிரக்கணக்கான ஆன்மிகவாதிகள் தவழ்ந்த ஒரு ஞான பூமி. இந்த பூமி புனிதத்தன்மை கொண்டது. இங்கு எல்லையற்ற மதங்கள் வளர்ந்து வியாபிக்க சகிப்புத் தன்மை கொண்ட மக்கள் நிறைந்த நாடு. எனவே, இந்த நாட்டுக்குத்தான் உலக அமைதிக்கு வழிகாட்டும் தகுதியுள்ளது” என்றார்.
போருக்காகவே ஒரு நாடு அரசாங்கத்தின் துறை (மினிஸ்ட்ரி ஆஃப் வார்) ஒன்றை வைத்துள்ளது. அதுதான் அமெரிக்கா. அமெரிக்காவால் போரைத்தான் உருவாக்க முடியும். அமெரிக்காவிலுள்ள பென்டகன் அமைதியை உருவாக்காது, போர் தளவாடங்களைத்தான் உற்பத்தி செய்து வணிகம் செய்யும். அமெரிக்காவால் உலகில் அமைதியை நிலைநாட்ட முடியாது.
இன்று நாடுகளுக்கிடையேயும், சமூகங்களுக்கிடையேயும், கட்சிகளுக்கு மத்தியிலும், ஒற்றுமையும் அமைதியையும் நிலைநாட்ட தலைவர்கள் இல்லை. ஆனால், அமைதி விரும்புவோர் ஏராளமாக உள்ளனர். அப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்களைக் கொண்டு இந்தியாவில் அமைதி காப்போர் இயக்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதேபோன்று உலக அளவிலும் உலக அமைதிக்கான அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு அமைதி காப்போர் இயக்கத்தின் அகில இந்திய மாநாட்டை தொடங்கி வைக்க ஒரு அமைதித் தூதுவர் வேண்டும் எனத் தேடினர். அந்தத் தேடலில் அவர்களுக்கு கிடைத்தது தமிழகத்தில் திருமூர்த்தி மலையில் செயல்படும் உலக அமைதிக்கான அறக்கட்டளையும், அதன் நிறுவனத் தலைவர் குருமகானும்தான். அந்த மாநாட்டை முன்நின்று வழிநடத்தும் டாக்டர் ஜில் கார் ஹரீஸ் நீண்ட நெடிய உரையாடலை உலக அமைதிக்கான அறக்கட்டளையின் தலைவருடன் நடத்தினார். அவருடன் நானும் அந்த உரையாடலில் கலந்து கொண்டேன். உலகில் பல நாடுகளில் ஒற்றுமைக்கான அமைச்சகம், நல்லிணக்கத்திற்கான அமைச்சகம், அமைதிக்கான அமைச்சகம், பாதுகாப்புக்கான அமைச்சகம் எனப் பெயரிட்டு வைத்திருக்கின்றன. ஆனால், அமெரிக்க நாடு ஒன்று மட்டும்தான் போர் அமைச்சகம் என்று பெயரிட்டு வைத்திருக்கிறது.
இந்தச் சூழலில் உலகில் அங்கொன்றும் இங்கொன்றும் என ஒரு சில நாடுகள் அமைதிக்காக செயல்படுவது தேவையான ஒரு செயல்திட்டம் என்ற கருத்தியலைக் கொண்டுள்ளன. அந்த நாட்டுத் தலைவர்களைக் கொண்டு அமைதிக்கான உலகக் கூட்டமைப்பை உருவாக்கவும் ஒரு செயல் திட்டம் தேவை” என்பதை வலியுறுத்தினார் ஜில் கார் ஹரீஸ். இந்த செயல் திட்டத்தை நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறது தமிழகத்தில் திருமூர்த்தி மலையில் உள்ள உலக அமைதிக்கான அறக்கட்டளை.
இந்தியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, கோஸ்ட்டாரிகா, ஆர்மீனியா, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த முன்னெடுப்பைச் செய்யத் தகுதி வாய்ந்த நாடுகள். இதற்கான முயற்சியில் அந்த நாட்டு தலைவர்களில் ஒரு சிலர் ஆர்வம் காட்டி வருவது ஒரு நம்பிக்கை அளிக்கும் செயல். பொருளாதார மேம்பாட்டுக்கு ஜி7 என்று இருப்பதுபோல் அமைதிக்காக ஏழு நாடுகள் என்று ஏன் உருவாக்கக்கூடாது என்ற பின்னணியில் ஒரு வேலைத் திட்டமும் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தை அந்த உரையாடலில் அவர் வலியுறுத்தினார்.
அமைதிப் பணியினை சாதாரண மக்களுக்கு உலகெங்கும் எடுத்துச் செல்லும் அமைதித் தூதுவர்களுக்கு ஒரு திறன் வேண்டும். அந்தத்திறன் வளர்ப்புப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் இந்த நிறுவனமும் அதன் தலைவரும் அமைதிக்கான தேசிய அமைப்புக்கும் சர்வதேச அமைப்புக்கும் தேவைப்படுகிறார் என்றார் ஜில் கார் ஹரீஸ்.
உள்ளூர் அமைதிக்காகவும், குடும்ப அமைதிக்காகவும் தேச அமைதிக்காகவும், உலக அமைதிக்காகவும், செயல்படும் நிறுவனம் இந்த உலக சமாதான அறக்கட்டளையாகும். அது மட்டுமல்ல, அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு தொடர்புள்ளது. அதேபோல் அமைதிக்கும் ஆன்மிகத்துக்கும் ஒரு தொடர்புள்ளது. அமைதியையும், வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் மக்களுக்குத்தர தேவையானது ஒரு மக்கள் தயாரிப்பு. இதற்கு சட்டமோ, நிதியோ, திட்டமோ, அரசின் ஆணையோ தேவையில்லை. தேவை ஒரு வழிகாட்டல் மட்டும்தான்.
அதை இந்த உலக அமைதிக்கான அறக்கட்டளை தொடர்ந்து தன் செயல்பாட்டால் மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்களை உருவாக்கி வருகிறது. எனவே, இன்று நிலவும் முரண்பட்ட, வன்முறை அரசியலுக்கு முடிவுகட்ட அமைதி நிலவிட குடும்பத்திலிருந்து உலகம் வரை தலைமை தேவைப்படுகிறது. எனவே, இந்த அமைதிக்கான கல்வியை அறிவியல்பூர்வமாக உருவாக்கி வைத்திருக்கின்ற அறக்கட்டளை இந்தியாவில் அமைதிக்காக செயல்படும் மாநாட்டிலும், உலக அமைதிக்காக செயல்படும் உலகளாவிய அமைப்புகளின் சர்வதேச மாநாட்டிலும் முக்கியப் பங்காற்றி வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த உலக சமாதான அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அமைதிக்காக நவம்பர் 11-ஆம் தேதி அமைதிக்கான கூடுதலை ஆயிரக்கணக்கான அமைதிக்காக பணி செய்யும் உணர்வாளர்களை, செயல்பாட்டாளர்களை வைத்து மாநாடு நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் அது பூடானில் நவம்பர் மாதம் மாநாடு நடத்த உள்ளது. அதேபோல் அந்த நிகழ்வை 2027-இல் ஜெனீவாவில் நடத்த உள்ளது. எனவே இந்த இரண்டு நாடுகளிலும் நடைபெறும் அமைதி மாநாட்டுக்கு, முன்னேற்பாடாக இந்த ஆண்டு நடைபெறும் அகில இந்திய மாநாடும் ஆப்பிரிக்க தேசமான பெனின்னில் நடக்கும் சர்வதேச மாநாடும் அடித்தளம் அமைக்கும் என்ற எண்ணத்தில் உலக சமாதான அறக்கட்டளையும் அதன் நிறுவனத் தலைவரும் கலந்துகொண்டு தொடக்க உரையும் வழிகாட்டு உரையும் ஆற்றுவது மிக முக்கியமான நிகழ்வாகும். அடுத்து தொடர்ந்து அமைதிக்காக ஒரு மாநாட்டை வாடிகனில் நடத்த முயற்சி எடுத்திருப்பதும் உலகில் ஒரு மிகப் பெரிய மாற்றத்துக்கான நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. உலக மக்கள் அமைதியில் வாழ நம் ஊர் அறக்கட்டளையை வழிநடத்த அழைத்திருப்பது தமிழகத்துக்குப் பெருமை என்று கொள்வோம்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.