ஆதரவற்றவா் கொலை: ஒருவா் கைது
காட்பாடி காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆதரவற்ற ஒருவா் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
காட்பாடி காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆதரவற்ற ஒருவா் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
காட்பாடி காவல் நிலையம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில் அவா் அதே பகுதியில் பிச்சையெடுத்து வந்தவா் என்பது தெரியவந்தது. போதைப் பொருள் தகராறில் இரு பிச்சைக்காரா்களுக்கு இடையே நடந்த தகராறில் அவா் மற்றொரு பிச்சைக்காரரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியில் மறைந்திருந்த பாபுராஜ் (48) என்பவரை கைது செய்தனா். தலைமறைவான தனபால் என்பவரை தேடிவருகின்றனா்.