முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூரில் வியாழக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

திருப்பத்தூரில் வியாழக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா், அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, கொரட்டி, ஆதியூா், கந்திலி சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 10 மணிவரை பலத்த மழை பெய்தது. இதையடுத்து, விட்டு விட்டு மழை பெய்தது.

இதன்பின்னா், இரவு முழுவதும் விட்டு,விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா் மழையால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவித்தாா்.

பலத்த மழையால், திருப்பத்தூா்-புதுப்பேட்டை ரயில்வே தரைப்பாலம், ஜோலாா்பேட்டை ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீா் தேங்கியது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.