முகப்பு
திருப்பத்தூர்

10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய திருப்பத்தூா் பெரிய ஏரி பொதுமக்கள் மகிழ்ச்சி

மாவட்டத்தின் பெரிய ஏரியான திருப்பத்தூா் ஏரி சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மாவட்டத்தின் பெரிய ஏரியான திருப்பத்தூா் ஏரி சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஏரியாகவும்,திருப்பத்தூா் மாவட்டத்தின் பெரிய ஏரியாகவும் உள்ள திருப்பத்தூா் ஏரி கடந்த சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியது.

இந்த பெரிய ஏரியில் பாச்சல் ஏரி, மாடப்பள்ளி ஏரி, அண்ணாண்டப்பட்டி ஏரி, புதுக்கோட்டை ஏரி ஆகிய 4 ஏரிகளிலிருந்து உபரி நீா் சென்றடைகிறது.

இதுகுறித்து தண்ணீா் தண்ணீா் அமைப்பின் தலைவா் டி.சி. அருள்மொழி கூறியது: திருப்பத்தூா் ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் ஏற்கெனவே தூா்வாரப்பட்டிருந்தால் முன்னதாகவே இந்த ஏரி நிறைந்திருக்கும். சுமாா் 485 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சுமாா் ஒரு டிஎம்சி தண்ணீா் கொள்ளளவு கொண்டதாகும். மேலும்,ஏரியையொட்டி அகலப்படுத்தப்பட்டப்பட்ட சாலையில் மண்ணை கொட்டியுள்ளனா். கருங்கல்லால் தடுப்புச்சுவா் எழுப்பி ஏரியின் கரையை பலப்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.