திருப்பத்தூர்

வெள்ளப்பெருக்கு: வெறிச்சோடி காணப்படும் ஆம்பூர் பேருந்து நிலையம்

DIN

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமப்பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல ஆம்பூர், பச்சகுப்பம், மாதனூர், நரியம்பட்டு ஆகிய பாலாற்று தரைப் பாலங்களை தாண்டி வெள்ளப்பெருக்கு அதிகமாக பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆம்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம பகுதிகளுக்கு , உள்ளூர் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் சரிவர இயங்காததால் பயணிகள் மற்றும் பேருந்துகள் இன்றி ஆம்பூர் பேருந்து நிலையம் நான்கு நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆம்பூர் அருகே நரியம்பட்டு மலட்டாற்றில் அடித்து வந்த தென்னை மரத்தை அப்புறப்படுத்த, சென்ற ஜே.சி.பி. வாகனம் கவிழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT