மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி
ஆம்பூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி சனிக்கிழமை இறந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM
ஆம்பூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி சனிக்கிழமை இறந்தாா்.
ஆம்பூா் அருகே உள்ள மாச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பெருமாள் (55). இவா் இரு நாள்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் மாடிக்குச் சென்றாா். அப்போது கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்தாா். காயமடைந்த அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.