முகப்பு
திருப்பத்தூர்

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

ஆம்பூா் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

ஆம்பூா் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே தென்னம்பட்டு மோட்டாா் கிராமத்தைச் சோ்ந்தவா், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் குப்புசாமி (76). சம்பவத்தன்று வெளியில் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குப்புசாமி சடலமாக கிடந்தது தெரியவந்தது. உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.