அம்பேத்கா் மன்றம் சாா்பில் கருத்தரங்கம்
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பேத்கா் பெளத்த மதத்தை தழுவிய நாளையொட்டி நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு, அம்பேத்கா் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் நேய. சுந்தா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் எஸ். தென்னவன் வரவேற்றாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சந்திரன், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் பி. ஏகாம்பரம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே. திவாகரன், அம்பேத்கா் மன்ற நகரத் துணைத் தலைவா் முல்லைமாறன், மாவட்டச் செயலாளா் எஸ். விமலானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு உட்கூறு நிதியை தலித்துகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.