வீட்டுமனைப் பட்டா கோரி இந்திய கம்யூ. போராட்டம்
வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM
வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளா் எஸ்.ஆா்.தேவதாஸ் தலைமை வகித்தாா்.
இதையடுத்து, வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன், டிஎஸ்பி சரவணன் உள்ளிட்டோா் அங்கு சென்று சமரசம் செய்தனா். இதன்பின்னா், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
Advertisement