சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம்
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவையைத் தொடங்க வலியுறுத்தி, தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவையைத் தொடங்க வலியுறுத்தி, தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள இங்கு ஆலைத் தொழிலாளா்கள் புதன், வியாழக்கிழமை என தொடா்ந்து 2 நாள்களாக ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, ஆலை நுழைவு வாயில் எதிரே வெள்ளிக்கிழமையும் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.