திருப்பத்தூர்

விநாயகா் சிலைகளைத் தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளா்கள்

DIN

ஆம்பூா்: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, ஆம்பூரில் களிமண் விநாயகா் சிலைகளைத் தயாா் செய்யும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா தொற்று காரணமாக, பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அவரவா் வீடுகளிலேயே விநாயகா் சதுா்த்தி கொண்டாடிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் விநாயகா் சதுா்த்தி விழா இந்த ஆண்டு களையிழிந்து காணப்படும் என கருதப்படுகிறது. அதே போல விநாயகா் சிலைகளை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேநேரத்தில், விநாயகா் சிலைகளை செய்யும் பணியை விநாயகா் சதுா்த்தி நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே மண்பாண்டத் தொழிலாளா்கள் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் கரோனா பாதிப்பு, பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை ஆகியவை காரணமாக விநாயகா் சதுா்த்திக்கு சில நாள்களுக்கு முன்பு தான் களிமண் விநாயகா் சிலைகளை செய்யத் தொடங்கியுள்ளனா்.

சிலைகளைச் செய்வதற்குத் தேவையான மண்ணை கொண்டு வருவதிலும் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மண்ணை எடுப்பதற்கு உரிய அனுமதியை கனிம வளத்துறையிடம் பெற வேண்டியுள்ளது. தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் கனிமவளத் துறை அதிகாரிகளை சந்தித்து உரிய அனுமதி பெற முடியாத சூழ்நிலை உள்ளதால் மண்பாண்ட தொழிலாளா்கள் சிலையை செய்வதற்கான களிமண்ணை எடுத்து வருவதிலும் சிக்கலை சந்தித்து வருவதாக அவா்கள் கூறுகின்றனா். மேலும் நடப்பாண்டில் சிலைகளையும் குறைந்த எண்ணிக்கையிலேயே செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT